இங்கு கிராம சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி விரிவாக விவரிக்கப்படும். ஒரு மனிதன் பிறப்பிக்கு முன்பும், வாழ்க்கையிலும், இறந்ததிற்கு பின்னும் காசாங்காடு கிராமத்தில் நடக்கும் சடங்குகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் சொந்தக்காரர்களின் கடமைகள், அவர்களின் பங்குகள் பற்றியும் இங்கு விவரிக்கப்படும். வாய்ப்பு சடங்குகள்:- புதுமனை நிலை நிறுத்தல்
- புதுமனை குடி புகுதல்
வருட சடங்குகள்:- வருடம் தோறும் பெண் வீட்டிலிருந்து (போகி பொங்கல்) வரிசை
- ஆடி படையல் (இறந்த முன்னோர்களுக்கு மரியாதையை செலுத்துதல்)
அத்தியாவசிய சடங்குகள்:- மருந்து கொடுக்கும் சடங்கு (முதல் குழந்தைக்கு மட்டும்)
- வலைகாப்பு (முதல் குழந்தைக்கு மட்டும்)
- பிறக்கும் குழந்தையின் சடங்குகள்
- 16'ம நாள் பெயர் சூடுவது மற்றும் தீட்டு கழித்தல்
- வாழ்வின் சடங்குகள்
- முடி இறக்குதல்
- காது குத்துதல்
- பூப்பெய்தல் (பெண்களுக்கு மட்டும்)
- திருமணம்
- மணமக்கள் அழைப்பு
- தாலி பெருக்கி போடுதல் (பெண்களுக்கு மட்டும்)
- 60 வயது திருமணம்
- இறந்த பின் சடங்குகள்
- சம்பந்த கொட்டுக்கள்
- காடு அமர்த்தல்
- எட்டாம் நாள்
- விளக்கு பார்த்தல் (பெண்களுக்கு மட்டும்)
- கரும திதி (பேச்சு வழக்கில் கருமாதி)
- மாசியம்
- அடுத்த தீபாவளி நாள் அன்று நினைவு கூர்ந்தல்
மேலும் கிராமத்தில் நடக்கும் சடங்குகள் அல்லது அதிலுள்ள சம்பிரதாயங்கள் விடபட்டுருந்தால் கிராம இணைய குழுமத்தில் பகிர்ந்து கொள்ளவும். |